டெல்டா திரிபு அதிகளவில் பரவ வாய்ப்புள்ளது – பேராசிரியர் மலிக் பீாிஸ்

209 0

டெல்டா வைரஸ் திரிபு, எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டில் அதிகளவில் பரவும் வாய்ப்புள்ளதாக சார்ஸ் வைரஸ் தொடர்பான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்ட பேராசிரியர் மலிக் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒரு தடுப்பூசியேனும் பெற்றுக்கொள்ளாதவர்கள் தொடர்பில் பிரச்சினை உள்ளது.

அத்துடன், வயது முதிர்ந்தவர்களுக்கே தொற்றினால் அதிக பாதிப்பு உள்ளமையால், அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும்.

தற்போது சிறந்த வினைத்திறன் உள்ள பைஸர், மொடெர்னா, அஸ்ட்ராசெனகா போன்ற தடுப்பூசிகளின், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டால், நீண்ட காலத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்ற நிலை உள்ளது.

எனினும், டெல்டாவோ அல்லது வேறு திரிபுகள் தோற்றம்பெற்று, தடுப்பூசியின் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்தால், மூன்றாம் தடுப்பூசியை செலுத்த வேண்டிய நிலை ஏற்படக்கூடும் எனத் தாம் கருதுவதாக சார்ஸ் வைரஸ் தொடர்பான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்ட பேராசிரியர் மலிக் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும், இயன்றளவு விரைவாக பொதுமக்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடுப்பூசியை வழங்குவதே இலங்கைக்கு தற்போது இருக்கின்ற முதலாவது பிரச்சினையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டெல்டா கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட காலி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் பணியாற்றிய இடத்தில், வைரஸ் தொற்றுறுதியான மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்களுக்கு டெல்டா வைரஸ் திரிபு தொற்றியுள்ளதா? என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.