பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு விசாரணையில் இருந்து மற்றொரு உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகியுள்ளார்.
குறித்த மனு இன்று(05) உயர் நீதிமன்றில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதியரசர் மஹிந்த சமயவர்தன தனது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்திருந்தார்.
இதேவேளை இதற்கு முன்னர் நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஜனக டி சில்வா மற்றும் ஏ.எச்.எம்.டி நவாஸ் ஆகியோர் விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனடிப்படையில் குறித்த மனு வேறு நீதிபதிகள் குழு முன்னிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.