கோவை, தேனி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

201 0

கோவை, தேனி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக ஓரிரு இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தேனி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
இதேபோல், நாளையும், நாளை மறுதினமும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனியில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.