உயிர் பூக்களின் உன்னதமான நாள்!

1393 0

இன்று கப்டன் மில்லரோடு ஆரம்பமானது  கரும்புலிகளின் வீரவரலாறு.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா இராணுவத்திற்கும் எதிராக, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாள் இன்று.

தரை, கடல், வான் என எங்கும் தம் உயிர் பூக்களை அள்ளி வீசிய அந்த ஒப்பற்ற தியாகிகளை நினைவு கூறும் நாள்.

”பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்” தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே. பிரபாகரன் அவர்கள் கூறியுள்ளார். எனவே, எமது இனத்தின் பலம் மிக்க ஆயுதங்கள் கரும்புலிகளே.

மறைமுக கரும்புலிகளாக எதியின் குகைகளுக்கு வெடித்தார்கள். அவர்களை இந்த உலகம் அறியாது.

தமது சுயத்தை மறைந்து சுகந்திரத்துக்காக தம்மை அர்ப்பணித்த கரும்புலிகள் தியாகத்தின் இமயங்கள்.

.இறுதி யுத்தத்தின் போது வன்னி பெரு நிலப்பரப்பில் குறிப்பாக முள்ளிவாய்கால் மண்ணை முத்த மிட்ட கரும்புலிகளின் விபரங்கள் எதுவுமே தெரியாமல் மௌனமாய் கண்ணீர் விடுகின்றோம்.

.கரும்புலிகளை பற்றி எம்மால் எதை எழுத முடியும் அவர்களே எம் இனத்தின் வரலாற்றை தம் உயிர் பூக்களால் எழுதி விட்டு சென்று விட்டார்கள்.