ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பதவிக்கு கொண்டு வர முற்போக்கு சக்திகளுடன் தானும் பெரும் பங்களிப்பை வழங்கியதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அந்த காலத்தில் எதிரணியில் இருந்து அண்மையில் அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டவர்கள் தமது கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு தாக்குதல் தொடுத்து கதைகளை பேசி வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக வந்தவர்கள் பாவம் செய்த புண்ணியத்திற்கு அமைச்சரானவர்கள் என அண்மையில் அமைச்சர் டிலான் பெரேரா கூறியிருந்தார்.இந்த கதை புண்ணியத்தில் அமைச்சரான டிலான் பெரேராவுக்கே பொருந்தும். நான் தேர்தலில் வெற்றி பெற்று மக்களின் வாக்குகளின் வந்தவர்.
தற்போது அரசியலமைப்பு மரண பொறி குறித்தும் நாட்டை பிளவுப்படுத்தும் அரசியலமைப்பு பற்றியும் கூட்டு எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். அரசாங்கத்தை இரண்டாக உடைக்கவே அவர்கள இதனை செய்து வருகின்றனர்.அரசியலமைப்பு குழுவில் நான் மாத்திரமல்லாது அமைச்சர் டிலான் பெரேராவும் இருக்கின்றார்.எனினும் குழுவில் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படுகின்ற விடயங்கள் என்ன என்பதை கூட்டு எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு பதிலாக அவர் முன்வைப்பதில்லை.
ஞானசார தேரர், வீரவங்ச மற்றும் கம்மன்பில ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தும் டிலான் பெரேரா, அவர்களுக்கு தேவையானவற்றை நிறைவேற்றி வருகிறார்.அரசாங்கத்தை இரண்டாக உடைக்கும் வேலையையே அமைச்சர் டிலான் பெரேரா செய்து வருவதாகவும் அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.