காலம் தாண்டியும் ஆறாத காயங்களுடன் யேர்மனியில் நடைபெற்ற ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்களின் நினைவேந்தல்

706 0

சுனாமி பேரலை அனர்த்தத்தின் 12 ம் ஆண்டு நினைவுநாள் நேற்றைய தினம் பன்னாட்டு ரீதியாக உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. ஆழிப்பேரலை காவுகொண்ட அனைத்து உறவுகளையும் நாம் என்றும் மறவோம்.இக்கொடூர பேரலையால் உயிர் நீத்த எமது அனைத்து உறவுகளையும் நினைவு கூருவதுடன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய நேற்றைய தினம் யேர்மனியில் பல்வேறு நகரங்களில் நினைவேந்தப்பட்டது.

aalen

ஆலன் நகரில் அங்கு வாழும் தமிழீழ மக்கள் நகர மதகுருவுடன் இணைந்து தேவாலய வழிபாட்டில் சுனாமியால் கொல்லப்பட்ட மக்களையும் , அத்தோடு யேர்மன் தலைநகர் பேர்லினில் கொல்லப்பட்ட மக்களையும் நினைவுகூர்ந்து சுடரேற்றினர்.எசன் நகரில் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினர் ஒருங்கிணைப்பில் நினைவுதூபிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்களின் நினைவாக சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

யேர்மன் தலைநகர் பேர்லினில் சுனாமி பேரலை அனர்த்தத்தின் 12 ம் ஆண்டையும் , பேர்லின் நகர மத்தியில் பயங்கரவாதச் செயலால் கொல்லப்பட்ட 12 பொதுமக்களையும் நினைவேந்தி 24 சுடர்கள் ஏற்றப்பட்டது.அத்தோடு Hannover நகரிலும் , Bruchsaal நகரிலும் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்கள் நினைவுகூரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடலை நம்பி வாழ்ந்த மக்களை கடலே கொன்றொழித்த சுனாமிப் பேரலை 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் நாள் இந்தோனேசியாவின் சுமாத்திராதீவில் பெரும் குமுறலாக எழுந்து இந்தோனேசியா, தமிழீழம், சிறிலங்கா, தமிழ்நாடு உட்பட்ட சில நாடுகளை தாக்கி மிக நீண்ட கடற்கரையோர நிலங்களை அழித்து சில மணிநேரத்திலேயே அடங்கிப்போனது. தமிழீழத்தில் முல்லைத்தீவு அம்பாறை மட்டக்களப்பு யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் கரையோரப்பிரதேசங்கள் சுனாமிப்பேரலையால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் கடலால் அள்ளுண்டு போயினர்.இதில் முல்லைத்தீவில் அதிகளவிலான மக்கள் கொல்லப்பட்டனர். தமிழீழத்தில் பலிகொள்ளப்பட்ட மக்களின் தொகை இருபதாயிரம் ஆகும்.

ஆனால் ஆழிப் பேரலையின் அழிவிற்குப் பின்னர் தனிநாட்டிற்குரிய பண்போடு அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்புப்பணியில் ஈடுபட்டார்கள். 2004 ஆம் ஆண்டு மீட்புப் பணியில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் பணிகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊடகங்களும் பாராட்டின. முல்லைத்தீவிற்கு 03 .01. 2005 அன்று அழிவுகளைப் பார்வையிட சென்ற அன்றைய யுனிசெப் தலைமை இயக்குநர் கரோல் பெலாமி தமிழீழ விடுதலைப் புலிகளின் மீட்புப் பணியையும் நிவாரண வழங்கலில் உள்ள திட்டமிடலையும் வெகுவாகப் பாராட்டினார்.அமெரிக்காவில் ~சிக்காக்கோ றைபியூன|; பத்திரிகை 07.01.05 அன்று தமிழீழ நிர்வாகத் திறமையைப் பட்டியலிட்டதுடன் தனிநாட்டிற்குரிய செயற்பாடுகளைக் கொண்டதெனவும் விபரித்தது இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது .

தமிழீழ விடுதலையை , தமிழ் மக்களின் சுதந்திரத்தை வென்றெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் தமது உயிர்களை அர்ப்பணித்து போரிட்டினர் . சிங்கள இனவெறி அரசின் கண்மூடித்தனமான எறிகணைகளால் , நச்சுக் குண்டுகளால் தமது உயிர்களை மட்டும் காவி கடலோரம் ஓடிச் சென்ற தமிழ் மக்கள் நீர் நிறைய மலை போல அவர்களின் உடல்கள் குவிந்தன . அதுவே 2009 இல் சிங்கள அரசு மற்றும் சில வல்லரசு நாடுகள் தமிழர்களை அழிக்க உருவாக்கிய செயற்கை சுனாமி .

நிச்சயமாக சுனாமியால் ஏற்பட்ட காயம், வடு இன்னும் மாறாமல் மக்கள் மனதை விட்டு நீங்காமல் பதிந்துவிட்டது. சொத்தை இழந்தவர்களுக்கு நம்மால் பண உதவி புரியலாம். ஆனால் தன் சொந்தத்தை இழந்து உயிருடன் ஜடமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் நம் மக்களுக்கு, இறந்து மண்ணுக்குல் மறைந்து போன நம் உறவுகளுக்கு நம்முடைய பிரார்த்தனைகளை தவிர வேறென்ன அதற்கு ஈடாக கொடுக்க முடியும்.

எமது விடுதலைக்காக வித்தாகி சென்ற எமது உறவுகளுக்கு, நாம் அவர்கள் எந்த லெட்சியத்துக்காக தமது உயிர்களை அர்ப்பணித்தார்களோ அதற்காக நாம் தொடர்ந்து உழைப்போம் என உறுதி எடுப்போம் .

berlin1

berlin2

berlin3

berlin4

berlin5

berlin7

berlin8

bruchsal

essen1

hannover

hannover1

essen3

essen4

essen5

essen6

essen7

essen8

essen9

essen11

esssen10