யாழில் மேலும் ஒரு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது .
யாழ், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே 131 சாவக்காடு கிராமம் தனிமைப் படுத்தப் படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்
குறித்த சாவக்காடு கிராமத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போது அதிகளவானோர் தொற்றுக்குள்ளானதன் காரணமாக குறித்த பகுதியினை முடக்குவதற்கு சுகாதாரப் பிரிவினர் சிபார்சு செய்து யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இன்று மாலை முதல் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டவுள்ளதாகவும் தெரிவித்தார்.