“நாட்டில் மீண்டுமொரு அலை ஏற்படும் அபாயம்” – மருத்துவர் சங்கம் எச்சரிக்கை

246 0

“பயங்கரமான நிலையிலிருந்து இலங்கை மீண்டுவிட்டது என கூறமுடியாது. எனவே, பயணக்கட்டுப்பாட்டை ஒரேடியாக தளர்த்தினால் மீண்டுமொரு அலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.” – என்று இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பயங்கரமான கட்டத்தை நாம் கடந்துவிட்டோம் என எந்த அடிப்படையிலும் குறிப்பிடமுடியாது. ஏனெனில் சுகாதார அமைச்சின் தரவுகளின் அடிப்படையில் நாளாந்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

எனவே, ஒரேடியாக வழமைக்கு திரும்பும் வகையில் பயணத்தடையை தளர்த்தக்கூடாது. அவ்வாறு செய்தால் மீண்டும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து புதிய அலை உருவாகக்கூடும். எனவே, உரிய மீளாய்வுகளின் பின்னரே பயணத்தடை தளர்த்தப்பட வேண்டும்.” – என்றார்.