இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் பொதுமக்களிற்கும் சிறுபான்மை சமூகத்தினருக்கும் எதிராக பயன்படுத்தப்படுவதால் சிவில் சுதந்திரம் குறைவடைகின்றது என்பதால் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயார் என எதிர்கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண இதனை தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தை விட்டுக்கொடுக்காமல் வலுவான தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் தேசத்தின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பது வெளிப்படையான விடயம் என குறிப்பிட்டுள்ள அவர் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் நாட்டின் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கும்வகையில் காணப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய சட்ட ஆணைக்குழுவின் நகல்வடிவை ஐக்கியமக்கள்சக்தி ஆரம்ப புள்ளியாக கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சிறுபான்மையினத்தவர்களை இலக்குவைத்துள்ளது,சிறுபான்மையினத்தவர்கள் அழுத்தங்களிற்கு உள்ளாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நன்கு அறியப்பட்ட புலனாய்வு அதிகாரி – சிஐடியின் தலைவர் கைதுசெய்து வைக்கப்பட்டுள்ளார்- அவருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை எனவும் எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.
போலிச்செய்திகள் என்ற போர்வையில் தற்போது ஊடகங்களும் சமூக ஊடகங்களும் இலக்குவைக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழப்பது ஏற்றுமதிகளையும் தொழில்களையும் பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.