பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாவிட்டால் மக்கள் மீது சுமையை செலுத்துவதற்கு பதில் அரசாங்கம் பதவி விலகவேண்டும்- ஐக்கிய மக்கள் சக்தி

195 0

பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாவிட்டால் மக்கள் மீது சுமையை செலுத்துவதற்கு பதில் அரசாங்கம் பதவி விலகவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்எம்மரிக்கார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின் போது எரிபொருட்களின் விலைகளை பலமடங்காக அதிகரிப்பது மக்களை கொதிக்கும் பாத்திரத்திலிருந்து அடுப்பிற்குள் தள்ளுவது போன்றது என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கம் எரிபொருள் விலைகளை இரண்டு அல்லது மூன்று ரூபாயினால் அதிகரித்தவேளை மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் சென்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விலை அதிகரிப்பு அனைத்து பொருட்கள் சேவைகளினது விலைகளிலும் அதிகரிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ள அவர் ஏற்கனவே அழுத்தங்களிற்கு உள்ளாகியுள்ள மக்கள் மீது மேலும் அழுத்தங்களை திணிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு பொருளாதார நெருக்கடி கொவிட் நெருக்கடி ஆகியன அனைத்திற்கும் அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் விலைகள் வீழ்ச்சியடைந்தவேளை எதிர்கட்சி மக்களிற்கு அதன் மூலம் கிடைக்கின்ற நன்மையை வழங்கவேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனால் அரசாங்கம் அதனை ஏற்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.