எரிபொருள் விலை குறைவடைந்தபோது அதன் நன்மையை மக்களுக்கு வழங்க அரசாங்கம் தவறிவிட்டது-எரான் விக்ரமரத்ன

216 0

எரிபொருள் விலை கடந்த ஆண்டு குறைவடைந்த நிலையில் அதன் பயனை மக்களுக்கு வழங்க அரசாங்கம் தவறிவிட்டது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

2019 ல் உலகளவில் 64 டொலராக இருந்த எண்ணெய் விலையை ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் சராசரியாக 43 டொலராக விலை குறைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் இந்த நன்மைகளை இலங்கை மக்கள் அனுபவிக்கவில்லை என எரான் விக்ரமரத்ன டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இறக்குமதி 2020 ஆம் ஆண்டில் 1.3 பில்லியன் டொலர்களை மிச்சப்படுத்தியது, ஆனால் சிபிசி பொது உத்தரவாதக் கடன் 2020 ஆம் ஆண்டில் 16% அதிகரித்து 345 பில்லியனாக அதிகரித்தது என்றும் எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.