கறுப்பினத்தவர் படுகொலை – ஒபாமா குற்றச்சாட்டு

464 0

obamaஅமெரிக்காவில் இடம்பெறும் கறுப்பினர்த்தவர்களின் படுகொலைகள் தொடர்பில் முழு அமெரிக்க மக்களும் அவதானம் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

மின்னேசொட்டா பகுதியில் காவற்துறையினரால் கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு குழப்ப நிலை உருவாகி இருக்கிறது.

இந்த சம்பவத்தை கண்டித்து கறுப்பின சமூகத்தவர்கள் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே லூசியானா பகுதியிலும் இவ்வாறு கறுப்பினத்தவர் ஒருவர் காவற்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஒபாமா, கறுப்பினத்தவர்கள் மீதான படுகொலைகள் நிறுத்தப்படாது தொடர்வதாக கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் அமெரிக்க நெருக்கடியான நிலைக்கு முகம் கொடுத்துள்ளது.

எனினும் ஒரே தேசத்தவர்களாக ஒன்றிணைய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

கடந்த புதன்கிழமை மின்னேசொட்டாவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட ஃபிலிண்டோ காஸ்டைல் என்ற குறித்த கறுப்பினத்தவருக்காக, தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.