கடந்த அரசாங்கத்தின் தவறான கல்விக் கொள்கை காரணமாக அனைத்து அரச நிர்வாக சேவைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா முன்வைத்துள்ளார்.
கடந்த 9 வருடங்களாக தவறான கல்வி கொள்கையே பின்பற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கல்வி மற்றும் நிர்வாக செயற்பாடுகள், முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.
பரீட்சைகள் நடத்தப்படும் போது மூன்று வகையான பரீட்சை வினாத்தாள்களே கடந்த ஒன்பது வருடங்காக தொடர்ச்சியாக தயாரிக்கப்பட்டு வந்துள்ளன.
இதனை தனியார் வகுப்புகள் நன்கு அறிந்திருந்தன.
இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் தனியார் வகுப்புகளால் மாணவர்கள் பரீட்சையில் ஏ சித்தி பெரும் வகையில் தயார்படுத்தப்பட்டு வந்துள்ளனர்.
அவர்கள் பரீட்சைகளில் 9 ஏ சித்திகளைப் பெற்றுக் கொள்ளும் போதும், நிர்வாகத்தை மேற்கொள்ளக்கூடிய திறமை அற்றவர்களாக இருக்கின்றனர் என்றும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.