23.12.2016 வெள்ளிக்கிழமை அன்று யேர்மனி , டோர்ட்மூன்ட் (Dortmund) நகரில் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது .
நிகழ்வின் ஆரம்பநிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மக்களால் மலர் மற்றும் சுடர் வணக்கம் செலுத்தப்பட்டு , விடுதலை நோக்கிய அரங்க நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
அரங்க நிகழ்வுகளில் முதலாவதாக தேசத்தின்குரல் நினைவு சுமந்த காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன. தொடர்ந்து தேசத்தின்குரல் நினைவு சுமந்த கவிதைகள், எழுச்சிப் பாடல்கள் மற்றும் மேஜர் பாரதி கலைக்கூடம் மற்றும் தமிழர் கலைபண்பாட்டுக் கழக ஆசிரியர்களின் நெறியாள்கையில் எழுச்சி நடனங்களும் இடம்பெற்றன.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உன்னத அர்ப்பணிப்பை செய்த மாவீர்களை நெஞ்சில் நிறுத்தி எத்தடை வரினும் எமது தாயக விடுதலை போராட்டத்தை தளராத துணிவோடு தமிழீழம் மலரும் வரை தாங்கிச் செல்வோம் என உறுதி எடுத்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரக மந்திரத்தை அனைவரும் ஓங்கி ஒலித்து உணர்வு பூர்வமாக நிகழ்வு நிறைவடைந்தது.