பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் இருவரிடம் வாக்குமூலம்!

296 0

பயணக்கட்டுப்பாடுகளை மீறி பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்டதாக் தெரிவிக்கும் குருநாகல் நகரசபையின் மேயரின் பிறந்தநாள் நிகழ்வுக்கு செய்தி சேகரிப்புக்காகச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் இருவரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் தொலைக்காட்சியில் கடமையாற்றும்,  இரு ஊடகவியலாளர்களையும் குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் அலுவலகத்துக்கு இன்று (10) அழைக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட உள்ளன.

மேயரின் பிறந்தநாள் நிகழ்iவை குறித்த இரு ஊடகவியலாளர்களும் வீடியோ எடுத்திருந்ததோடு, அவர்கள் பணிப்புரியும் தொலைக்காட்சிகளிலும் இந்த வீடியோக் காட்சிகள் வெளியாகியிருந்தன.

இதேவேளை பிறந்தநாளைக் கொண்டாடிய குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ விதாரவின் மனைவி தற்போதுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டி குருநாகல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் திஸாநாயக்க தற்போது ஒழுக்காற்று நடவடிக்கைக்காக குளியாபிடிய பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.