தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதியை வெளியிட வேண்டும்- உதய கம்மன்பில

275 0

download-2கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதியை வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
டிசம்பர் 10 ஆம் திகதி வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் தமக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

வழங்கப்பட்ட வாக்குறுதி என்ன என்று சுமந்திரனிடம் கேட்ட போது அவர் பதிலளிக்கவில்லை.
கடந்த 19 ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றை நடத்திய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

வாக்குறுதியை நிறைவேற்றுமாறும் கூறும் இவர்கள் என்ன வாக்குறுதி என்று கூறுவதில்லை.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் வாக்குறுதி குறித்து எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை.
வாக்குறுதி என்ன என்பதை அறிய மக்களுக்கு உரிமையுள்ளது. தமது தலையெழுத்தை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது.

சில நேரம் ஜனாதிபதி இவற்றை அறியாமல் இருக்கலாம். எனினும் பிரதமருக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இது கட்டாயம் தெரிந்திருக்கும். இவர்கள்தான் அரசாங்கத்தை கவிழ்க்க மேற்குலக நாடுகளுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டனர்.

2017 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முன்னர் வாக்குறுதி என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என நாங்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இந்த வாக்குறுதி பற்றி அறிந்தால்தான் 2017 ஆம் ஆண்டு நன்மையானதா தீமையானதா என்பதை எண்ண முடியும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளா