மேல்மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் கைது

320 0

downloadநீர்கொழும்பு கல்கந்த புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண சபை உறுப்பினர்களான ஆனந்த ஹரிசந்திர மற்றும் லாலந்த குணசேகர ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பு கல்கந்த புகையிரத கடவையை மறித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமையினாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.