உள்ளுராட்சி எல்லை நிர்ணய அறிக்கை நாளை அமைச்சரிடம் கையளிக்கப்படும்

292 0

eallaiஉள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கை நாளை 27ஆம் திகதி உள்ளூராட்சி , மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கையளிக்கவுள்ளதாக எல்லை நிர்ணயம் தொடர்பான குழு தெரிவித்துள்ளது.

தற்போது அது தொடர்பான அறிக்கையை தயாரிக்கும் பணிகள் முடிந்துவிட்டதாகவும் இதன்படி நாளை அதனை அமைச்சரிடம் கையளிக்க முடியுமாக இருக்குமெனவும் அந்த குழுவின் தலைவர் அசோ பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணயங்களை மேற்கொள்வதற்கான அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் 2015 ஒக்டோம்பர் 22ஆம் திகதி அசோ பீரிஸ் தலைமையில் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன்படி அந்த குழுவினர் நீண்ட இழுபரிக்கு மத்தியில் தற்போது அது தொடர்பான இறுதி அறிக்கையை தயாரித்துள்ளதுடன் அதனை 27ஆம் திகதி அமைச்சரிடம் கையளிக்கவுள்ளனர்.

இதேவேளை குறித்த அறிக்கை கிடைத்தவுடன் உள்ளுராட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.