குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் எனக் கூறி, தொலைப்பேசிகளுக்கு அழைப்பை ஏற்படுத்தி நபர்களை அச்சுறுத்தி, பணம் பறிக்கும் மோசடியில் குறித்து காவல்துறைக்கு தகவல்கள் வந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.