குச்சவெளியில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

297 0

தற்போது நாட்டை மிகவும் அச்சுறுத்தி வருகின்ற COVID-19 வைரஸ் பரவல் காரணமாக கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன்,பயணத்தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொழிலுக்கு செல்லமுடியாது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த அடிப்படையில் முதற் கட்டமாக மூவின  மக்களும் செறிந்து  வாழும், புல்மோட்டை சுனாமி வீட்டுத்திட்ட கிராமத்தில், வாழ்கின்ற வறிய மக்களுக்கான உலர் உணவு பொதிகளை, குச்சவெளி பிரதேச சபையின்  தவிசாளர் ஜனாப் ஏ.முபாறக் அவர்கள், இன்று(8) வழங்கி வைத்தார்.

இதன் போது இருநூறிற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தின், புலனாய்வு பிரிவு அதிகாரி  சஞ்சீவ மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில், தங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்த,  தவிசாளர் அவர்களுக்கு  அப்பகுதி பயனாளிகள்  நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

அத்துடன் தங்களின் கிராமங்களில் ஏதாவது பிரச்சினைகள், தேவைகள் ஏற்ப்பட்டால் எந்நேரத்திலும் தனக்கு அறிவித்து உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளுமாறு,  தவிசாளர் இதன் போது கேட்டுக்கொண்டார்