வவுனியா, பூந்தோட்டம் ஆலய பரிபாலன சபையால் இலங்கையில் சுனாமி நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் இன்று அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் முன்னதாக சுனாமி அனர்த்ததில் மரணித்த மக்களுக்கான ஆத்மசாந்திப் பிரார்த்தனை நரசிங்கர் ஆலயத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பூந்தோட்டம் சுனாமி நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது.
ஆலய பரிபாலனசபைத் தலைவர் எஸ்.புலேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரராதலிங்கம், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வியமுனி சோமரட்ண, பிரதேச செயலாளர் கா.உதயராசா, நகரசபைச் செயலாளர் தயாபரன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள், மதகுருமார் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இத்தூபியே சுனாமி தொடர்பில் இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது நினைவுத்தூபி ஆகும்.