ரஷிய ராணுவ விமானம் விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு

285 0

201612261109576650_russian-rescue-teams-recover-11-bodies-after-plane-crash_secvpfரஷிய ராணுவ விமான விபத்தில் பலியான 11 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் உடல்களை தேடும் பணியில் 3 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

சிரியாவில் நடைபெறும் உள் நாட்டு போர் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அடக்க அங்கு ரஷிய ராணுவம் முகாமிட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் வீரர்களுடன் ரஷிய ராணுவ விமானம் புறப்பட்டு சென்றது.

அதில் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட ராணுவ இசைக்குழுவை சேர்ந்த 64 பேரும் இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 92 பேர் விமானத்தில் பயணம் செய்தனர். சோச்சி நகரில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சிறிது நேரத்தில் கருங்கடலில் விழுந்து நொறுங்கியது. அதில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியாகினர்.

அதை தொடர்ந்து விபத்தில் பலியானவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 109 பேர் ஆழ்கடலில் மூழ்கும் நீச்சல் வீரர் ஆவர்.

மேலும் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அவர்கள் விபத்தில் பலியானவர்களில் 11 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.

இதற்கிடையே விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரஷியாவில் இன்று தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்படுகிறது. இத்தகவலை அதிபர் விளாடிமிர் புதின் டெலிவி‌ஷனில் அறிவித்தார்.