கருணாநிதி தலைமையில் ஜனவரி 4-ந்தேதி காலை 9 மணியளவில் தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த 20-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வருகிற 4-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெறும்.
பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட பொதுக்குழு கூட்ட அழைப்பிதழினை இக்கூட்டத்திற்கு வரும்போது தவறாமல் உடன் கொண்டு வர வேண்டும்.
பொதுக்குழுவில் தி.மு.க. ஆக்கப்பணிகள் மற்றும் தணிக்கைக் குழு அறிக்கை பற்றி விவாதிக்கப்படுகிறது.இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.