யாழில் விசேட ரோந்து நடவடிக்கையில் பொலிஸார்!

357 0

யாழ்ப்பாணம்- புறநகர் பகுதிகளில் பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையிலான மோட்டார் சைக்கிள் அணியினரால் குறித்த விசேட ரோந்து நடவடிக்கை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முன்னெடுக்கப்பட்டது.

அதாவது, யாழ்ப்பாணம்- பாசையூர் மற்றும் குருநகர் பகுதிகளிலேயே இந்த ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பயணத்தடையை மீறி நடமாடியவர்களை கடுமையாக எச்சரித்து அப்பகுதியில் இருந்து பொலிஸார் அனுப்பியுள்ளனர்.

இவ்வாறான சுற்றிவளைப்பு, யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.