கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாட்டினர் வருவதற்கான தடையை பல்வேறு நாடுகள் விதித்துள்ளன.
கிரீஸ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,09,368 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் 20,809 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தற்போது வரை 12,899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக அளவில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை மிகத் தீவிரமாக அதிகரித்தது. இந்த சூழலில் பல்வேறு நாடுகளில் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கிரீஸ் நாட்டுக்கு வெளிநாட்டினர் வருவதற்கான தடையை ஜூன் 14-ம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.