யேர்மனிய அரசின் நாடுகடத்தலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்- யேர்மனி போட்சைம். 6.6.2021

659 0

யேர்மனிய அரசால் இங்கு அரசியற் தஞ்சம் கோரியிருந்த தமிழீழத் தமிழர்களை நாடுகடத்தும் நடவடிக்கையை நிறுத்தக் கோரி இன்று 6.6.2021 ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் நடைபெற்றது.

யேர்மனி போட்சைம் நகரில் அமைந்துள்ள நரடுகடத்துவதற்காக சிறைவைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு முன்பாக கூடிய தமிழ் மக்கள் தமது வேண்டுகோளைக் கோசங்களாக எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இச்சிறைச்சாலையில் அண்ணளவாக 20 ற்கும்; மேற்பட்ட தமிழர்கள் வருகின்ற 9 ஆம் திகதி நாடுகடத்துவதற்கு சிறை வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அச்சிறைச்சாலைக்குள் இருந்து தொலைபேசி ஊடாக ஆர்பாட்டம் செய்தவர்களுடன் தொடர்பு கொண்ட தமிழர் ஒருவர் தமக்காகக் குரல் கொடுத்ததற்கு நன்றி கூறிவிட்டு எப்படியாவது நீங்கள்தான் எங்களைக் காப்பற்றவேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.