தென் சிலி பகுதியில் பாரிய நிலநடுக்கம் ,சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது- அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்

400 0

5-18-720x480தென் சிலி பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிலியில் சற்று முன்னர் 7.7 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதுடன், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

சிலியிலிருந்து 10 கடல் மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து சிலியின் கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1000 கிலோமீற்றர் வரையான உயரத்திற்கு கடல் அலைகள் ஏழக்கூடும் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் எதிர்வு கூறியுள்ளது,

இதேவேளை, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி தாக்கி  12 வருடங்கள் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது,