முல்லைத்தீவில் இரு மீன்கள் மலிவாக விற்பனை செய்யப்படுவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சாளை, சூடை மீன்கள் ஒரு கிலோ கிராம், 80 ரூபாய் தொடக்கம் 120 ரூபாய் வரையிலும் வரை விற்பனை செய்யப்படுகின்றனர்.
அந்த வகையான மீன்கள், கடந்த பத்து நாள்களுக்கு முன்னர், கிலோ கிராம் 250 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டன.
ஏனைய மீன்களின் விலை கிலோ கிராம் ஒன்று, 450 ரூபாய் தொடக்கம் 700 ரூபாய் வரையிலும் வரை விற்பனை செய்யப்படுகின்றன என கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
“பயணத் தடைகள் காரணமா மாவட்டத்துக்குள்ளும், மாவட்டத்துக்கு வெளியிலும் மீன்களைக் கொண்டு செல்வதில் நெருக்கடி காணப்பட்டாலும் இயன்றளவு கிராமங்களுக்குள் மீன்களை கொண்டு செல்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது” என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் மரியதாஸ் பிறெட்ரிக் ஜோன்சன் தெரிவித்தார்.
“இதேவேளை, சுருக்கு வலை, வெளிச்சம் பாய்ச்சி தொழில் செய்தல் போன்ற சட்டவிரோத தொழில்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை எனவும் சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் தொழில்களே மீன்களின் விலைகளை முல்லைத்தீவில் தீர்மானிக்கின்றன” எனவும் தெரிவித்தார்.