கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக 286 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது -கெஹெலிய ரம்புக்வெல்ல

233 0

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் இதுவரை 286 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

5000 ரூபா இடர்கால கொடுப்பனவுக்காக 80 பில்லியன் ரூபாவும், புத்தாண்டு காலப்பகுதியில் 15 பில்லியன் ரூபாவும், தற்போது 35 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசிக்காக அரசாங்கம் பாரிய தொகையை செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், நிவாரணப் கொடுப்பனவு உரியவாறு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், எதிர்வரும் நாட்களில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்துக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.