கறுப்பு பூஞ்சை வராமல் தடுப்பதற்கான மருந்துகள், ஓமியோபதி சிகிச்சையில் உள்ளதாகவும், அவற்றுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என்றும், இந்திய மருத்துவ முறை டாக்டர்கள் தெரிவித்துஉள்ளனர்.
‘ஆம்போடெரிசின் — பி’ மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், அதற்கான மாற்று மருத்துவ முறைகள் குறித்து, நிபுணர்கள் குழு பரிசீலிக்க வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்து உள்ளனர்.ஓமியோபதி டாக்டர் பூவேந்தன் கூறியதாவது:மஞ்சள் காய்ச்சல், காலரா, மலேரியா, டெங்கு, ஸ்பெயின் புளூ என, உலக அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய தொற்று நோய்கள், ஓமியோபதி மருந்துகள் வாயிலாக குணப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில், கொரோனா, கறுப்பு பூஞ்சை பாதிப்புகளையும், ஓமியோபதி சிகிச்சை முறையில் குணப்படுத்த முடியும்.கொரோனா வைரஸ், சுவாசப்பாதை மற்றும் நுரையீரல் செல்களை சேதப்படுத்துகிறது. அதன் காரணமாகவே, பல லிட்டர் ஆக்சிஜனை செலுத்தி சிகிச்சை அளித்தாலும், பலருக்கு பலன் அளிப்பதில்லை. செல்களின் ஆற்றலை துாண்டி, அதனை செயல்பட வைப்பதும், அதனை மேலும் சேதமடையாமல் பாதுகாப்பதுமே, இதற்கு தேவையான சிகிச்சை முறைகள்.
அந்த வகையில், ஓமியோபதி மருத்துவ சிகிச்சை முறையில், அதனை துல்லியமாக செயல்படுத்த முடியும்.மேலும், ‘ஸ்டீராய்டு’ மருந்துகளின் பயன்பாட்டை தவிர்க்க இயலும். இந்த மருத்துவ முறையின் சிகிச்சையால், மீண்டு வருபவர்களுக்கு, கறுப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஸ்டீராய்டு மருந்துகளின் தாக்கத்தால், கறுப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டாலும், ‘சீகேல் கார் 30, ஆர்செனிக் ஆல்பம் 200, துாஜா 30, லச்சசிஸ் 30’ போன்ற, ஓமியோபதி மருந்துகள் வாயிலாக குணப்படுத்தலாம்.
‘பிரையோனியா 200, ஆர்செனிக் ஆல்பம் 1’ போன்ற மருந்துகளால், அந்த பாதிப்பு வருமுன்னரே தடுக்கலாம்.கறுப்பு பூஞ்சைக்கான, அலோபதி மருந்துகளுக்கு கடும் தட்டுப் பாடு நிலவி வரும் நிலையில், ஒமியோபதி மருத்துவ முறையில், அதனை குணப்படுத்து வதற்கான வாய்ப்புகளை, அரசு வழங்க வேண்டும்.இதுதொடர்பான நடவடிக்கைகளை, விரைந்து மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.