இதில், 6,460 குடும்பங்கள் இந்த நிவாரணத்துக்கு தகுதிபெற்றுள்ளார்கள். அந்த குடும்பங்களுக்கான முதற்கட்ட நிவாரண பணிகள் 06 ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளது.
“பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மக்களுக்கான நிவாரண பணிகளை வழங்கி வைக்கப்பட்டுள்ளது” என புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான நிவாரணம் வழங்கல் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த மக்களுக்கான 5 ஆயிரம் ரூபாய் நிவாரணங்களை வழங்குவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளேம் பிரதேசத்தில் உள்ள இரண்டு பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் ஊடாக பெறவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது” என்றார்.
அவ்விரு சங்கங்களும் நாளொன்றுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பொதிகளையே தருகின்றன, இந்நிலையில், புதுக்குடியிருப்பு கூட்டுறவு சங்கத்துக்கு உதவியாக பிரதேச செயலகம் ஊடாக இரண்டாயிரம் பொதிகளை பொதியிட்டு கொடுத்துள்ளோம் எனத் தெரிவித்த அவர், பட்டதாரி பயிலுனர்கள் 50 பேரை வைத்து 2 ஆயிரம் பொதிளை பொதிச்செய்ய 6 நாள்கள் தேவைப்பட்டுள்ளன.
வடக்கில் அதிகளவான நிவாராணம் கொடுக்கும் பிரதேசமாகவே புதுக்குடியிருப்பு காணப்படுகின்றது என்றார்.
“8ஆம் திகதியன்று இரண்டாம் கட்ட நிவாரணங்கள் வழங்க தீர்மானித்துள்ளோம்” என்றார்.