நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 ஆயிரத்து 280 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து ஆயிரத்து 534 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஆயிரத்து 851 பேர் குணமடைந்து தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 இலட்சத்து 66 ஆயிரத்து 132 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில் நாட்டின் கொரோனா சிகிச்சை நிலையங்களில் 33 ஆயிரத்து 746 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.