“இயற்கை எனது நண்பன்…….!”-இன்று உலக சுற்றுச்சூழல் நாள்.

2734 0

“இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.” தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தீர்க்க தரிசனத்துடன் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே பதிவு செய்து விட்டார்.

காடுகளை அழிப்பவர்களையும் வீட்டில் பயன் தரு மரங்களை வெட்டுபவர்கள் மீது் கடும் நடவடிக்கை எடுத்ததுடன் பதிலுக்கு அவர்களை கொண்டு பல மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்ற நூதன தண்டனையும் வழங்கினார். அத்தோடு காட்டு ​அரியவகை விலங்குகளை வேட்டையாடக் கூடாது என்ற கட்டளையையும் வழங்கியிருந்தார் . ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் உணரப்பட்டு இன்று உலக மக்கள் அனைவராலும் பேசு பொருளாக மாறியுள்ளது.

இன்று உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் 1972-ம் ஆண்டு ஜூன் 5-ஆம் நாள் உலக சுற்றுச்சூழல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கமைய இன்றைய நாளை உலக நாடுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடுகின்றது

ஐ.நா சார்பில் இத்தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்பட்டு வருகின்றது.. உலகிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றாலும், ஒவ்வொரு ஆண்டிலும், முதன்மைக் கொண்டாட்டத்துக்கான இடமாக ஓர் இடம் தெரிவு செய்யப்படுவது நடைமுறையில் உள்ளது.

அதேவேளை  ஜூன் 5 -ஆம் நாள் ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீர்தத பொன்னுத்துரை சிவகுமாரனின் நினைவு நாள்ளாகும்.

​யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவரான சிவகுமாரன் சிறிலங்கா அரசின் கல்வித் தரப்படுத்துதல்  சட்டத்திற்குதிராகத்  தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு செயற்பட்டார்.

உரும்பிராயில் சிறிலங்கா காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி தியாக மரணமடைந்தார். எனவே அவர் வீரச்சாவடைந்த தினத்தை தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக நினைவு கொள்ளப்பட்ட போதிலும் உலக சுற்றுச் சூழல் நாள் ஜூன் 5 வருவதால் அதன் முக்கியத்துவம் கருதி அதற்கு மதிப்பளித்து தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மறு நாள் (ஜூன் 6)

தியாகி பொன்.சிவகுமாரன் நினைவு தினத்தை  தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தினார்.

ஈழ விடுதலை போராட்டத்தில் முதல் வீரன் உயிர்விட்ட நாள் , உலகம் உயிர் காற்றுக்காய் மரங்களை பாதுகாக்க உறுதி செய்துகொண்ட நாள்.