நத்தாரை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையிலிருந்து கைதிகள் மூவர் விடுதலை-காணொளி

357 0

sequence-01-still044பல்வேறு காரணங்களினால் பிளவுபட்டுள்ள மக்களை கிறிஸ்துவின் பிறப்பு ஒன்று சேர்த்துள்ளதாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் விடுதலையும், நத்தார் வழிபாடுகளும் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சர் அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை கலந்து கொண்டு வழிபாடுகளை நடாத்தினார்.
இதன்போது சிறைக்கைதிகள் கலந்து கொண்ட விசேட நத்தார் திருப்பலி பூஜை நடைபெற்றதுடன், மறை உரைகளும் நத்தார் செய்திகளும் வாசிக்கப்பட்டன.

அத்துடன் நத்தார் பண்டிகையினை முன்னிட்டு சிறுகுற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கமுடியாமல் சிறைவைக்கப்பட்டிருந்த மூன்று சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வின்போது மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன், மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசன், எகெட் கரிதாஸ் அமைப்பின் பணிப்பாளர் அருட்தந்தை டிலிமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.