நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பெறப்பட்ட 96 மரபணு மாதிரிகளை பயன்படுத்தி கொவிட்-19 வைரஸ் தொற்றின் புதிய திரிபு தொடர்பான பரிசோதனை முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து எமது செய்தி பிரிவு வினவியபோது, அந்த பல்கலைகழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில தொடர்ந்து அதிகரித்துவரும் கொவிட் தொற்றுக்கு மத்தியில் புதிய திரிபுடைய வைரஸ் தொற்று குறித்த ஆய்வொன்றை எமது பல்கலைக்கழகம் ஆரம்பித்துள்ளது.
எனவே எதிர்வரும் இரண்டு வாரங்களில் இது தொடர்பான அறிக்கை சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.