ஆண்டுதோறும் ஜூன் 3-ந்தேதி உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கிய சாதனமாக இருந்த சைக்கிள், இன்று உடற்பயிற்சி சாதனமாக மாறி விட்டது.
ஆண்டுதோறும் ஜூன் 3-ந்தேதி உலக மிதிவண்டி (சைக்கிள்) தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் போக்குவரத்திற்கு முக்கிய சாதனமாக இருந்த சைக்கிள், இன்று பெரும்பாலும் உடற்பயிற்சி சாதனமாக மாறி விட்டது. ஆனாலும், சமீபகாலமாக சைக்கிள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் உடல் ஆரோக்கியம் மற்றும் எடையை எளிதாக குறைக்க உதவுகிறது.