ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நிறுவனங்களின் இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு, மருத்துவ ஆய்வு நிறுவனம், இலங்கை அளவைத் திணைக்களம், குடும்ப சுகாதார அலுவலகம், வடமேல் மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் சிலவற்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அரசாங்க இணைய தளங்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த எச்சரிக்கையை அரசாங்கம் பொருட்படுத்தாத காரணத்தினால் இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.