கொரோனா பேரிடர் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக மாநகர இயல்பு நிலையை இழந்திருக்கும் சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொண்டு யாழ்.நகரப் பகுதி வடிகால்கள் மிகவேகமாக தூய்மைப்படுத்தப்படுகின்றன.
அந்தவகையில் யாழ்ப்பாணம் ஸ்ராலி வீதியில் காணப்படுகின்ற வடிகால்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்ற அதே வேளை பல வருடங்களாக தூர்வாரப்படாத ஸ்ரான்லி வீதிக்கு கீழுள்ள நகரக்குளத்தினை சென்றடைகின்ற பிரதான வடிகாலினைத் தூர்வாருகின்ற பணிகளும் நடைபெறுகின்றன.
அத்துடன் ஸ்ரான்லி வீதியிலுள்ள ஒரு மண்டபத்தின் வாகனத்தரிப்பிடத்தின் கீழாக நகரக் குளத்தினை வந்தடைகின்ற பிரதான வெள்ளவடிகாலினை தூர்வாருகின்ற பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதன் ஆரம்ப கட்டமாக குறித்த வாகனத்திரிப்பிடத்தின் கீழ் வடிகாலினுள் எமது தூய்மைப்பணியாளர்கள் இறங்கி தூய்மைப்படுத்தும் வகையில் வாகனத்திரிப்பிடத்தின பல இடங்களில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நிலத்தினை வெட்டி அகற்றுகின்ற பணிகள் நடைபெறவுள்ளன.
யாழ்.நகரத்தினை தூய்மைப்படுத்தும் செயற்றிட்டத்தில் வடிகால்களினை தூர்வாருகின்ற மாநகர சபை தூய்மைப்பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.