வடக்கு மாகாணத்தில் நேற்று 130 பேருக்கு தொற்று உறுதி

300 0

யாழ்ப்பாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனாத் தொற்றுத் தொடர்பிலான பரிசோதனை களில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 130 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் எழுமாற்றான பரிசோதனைகளிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் யாழ்ப்பாணம்,
கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 29 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும்,

கிளிநொச்சியின் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேரும் தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட் டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட எழுமாற் றான பரிசோதனையில் 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12பேர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர்,

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள் ளனர்.

யாழ். போதனா வைத்திய சாலையில் நேற்று மேற்கொள் ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை யில் வடக்கு மாகாணத்தைச்
சேர்ந்த 79 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 பேருக்குத் தொற்று

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர்,

மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர்,மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்,மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்,உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர் அடையாளம் காணப்பட் டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 15 பேர் அடையாளம் காணப்பட் டுள்ளனனர். வவுனியா சுகாதார வைத்திய அதி காரி பிரிவில் 05 பேர், சிதம்பரபுரம் பிரதேச வைத்தியசாலையில் 03 பேர்,யாழ்.போதனா வைத்தியசாலையில் 06 பேர்,
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதன்படி கிளிநொச்சி மாவட்ட வைத்திய
சாலையில் ஒருவர்,கிளிநொச்சி கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,அக்கராயன் குளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர் உட்பட்டவர்களே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.