புத்தாண்டு கொத்தணியில் அதிகரிக்கும் தொற்றாளர் எண்ணிக்கை!

203 0

நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது.

அந்த வகையில் நேற்றையதினம் 3,297 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானது.

அவர்களில் 3,264 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 33 பேருக்கு நேற்று கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன்படி புத்தாண்டு கொத்தணி, திவுலுபிட்டிய, பேலியகொட, சிறைச்சாலை கைதிகள் ஆகிய கொத்தணிகளில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 189,186 ஆக அதிகரித்துள்ளது.

புத்தாண்டு கொத்தணியில் 94,065 பேரும், பேலியகொட கொத்தணியில் 82,785 பேரும், சிறைச்சாலை கொத்தணியில் 6,013 பேரும், திவுலபிட்டிய கொத்தணியில் 3,059 பேரும் இதுவரையில் அடையாளம் காணப்பட்டனர்.

இவ்வாறு இலங்கையில் மொத்தமாக கொவிட் தொற்றுறுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 195,844 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலைமையில் 31,839 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நேற்று 1,683 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறினர்.

இதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 162,397 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் நேற்றையதினம் இலங்கையில் நாடு முழுவதும் 21,697 பீ.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.