கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்க அனுமதி!

227 0

கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் கொவிட் தடுப்பூசியை வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் தடுப்பூசிகள் தொடர்பான வழிநடத்தல் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

மேலும், தடுப்பூசி வழங்கும் போது அனர்த்தம கூடிய பிரதேசங்களிலுள்ள தாய்மார்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று விசேட வைத்தியர் சித்ரமாலா த சில்வா,   அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்தார்.

இதேவேளை, மேலும் 12 மாவட்டங்களில் அவதானம் கூடிய பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு இம் மாதம் 8 ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கவுள்ளதாகவும் கொவிட்-19 வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.