திரிபுரா டாக்டர்கள் சாதனை : 225 கொரோனா கர்ப்பிணிகளுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்தன

285 0

கொரோனாவின் 2-வது அலைக்கு கர்ப்பிணிகளும் தப்பவில்லை. தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் 2-வது அலைக்கு கர்ப்பிணிகளும் தப்பவில்லை. தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இதற்கிடையே திரிபுராவின் அகர்தலாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள் 225 பேருக்கு தொற்று இல்லாமல் ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்துள்ளன.

இதுகுறித்து ஆஸ்பத்திரியின் மருத்துவ அதிகாரி ஜெயந்தாராய் கூறுகையில், ‘மற்ற நோயாளிகளைவிட தொற்று பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு டாக்டர்களும், நர்சுகளும் கூடுதல் கவனம் செலுத்தினார்கள். இதனால் 225 பேருக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்திருப்பது ஒரு சாதனை தான். சரியான மருத்துவ வசதி மற்றும் மருத்துவ உபகரணங்களும் இல்லாத சூழ்நிலையில் இந்த சாதனையை ஆஸ்பத்திரி ஊழியர்கள் நிகழ்த்தி உள்ளனர்.’ என்று தெரிவித்தார்.