இலங்கையில் வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுப்பு!

212 0

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் பல மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தாழ் நில பிரதேசங்களில் வெள்ளம் ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 19 செயலகப் பிரிவுகளுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று முமல் நாளை காலை 9 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் சீத்தாவக்க பிரதேச செயலாளர் பிரிவிலும், காலி மாவட்டத்தில் நெலுவ, களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, புலத்சிங்க, மாத்தறையில் பிட்டபெத்தர, நுவரெலியாவில் வளப்பனை, இரத்தினபுரியில் அயகம மற்றும் குருவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.