தேர்தல் வெற்றியின் மூலம் தங்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
* ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் கொரோனாவுக்கு எதிராக திமுக அரசு போராடி வருகிறது.
* கொரோனா இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு தொடர்ந்து போராடி வருகிறேன்.
* தேர்தலில் நமக்கு வாக்களிக்க தவறியவர்கள் பாராட்டையும் பெறும் வகையில் செயல்படுகிறேன்.
* கம்பீரமாக வருகிறேன், தலைநிமிர்ந்து வருகிறேன். தேர்தல் வெற்றியின் மூலம் தங்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.