கிழக்கு மாகாணத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகளுக்கு​ ரூ.50 மில். ஒதுக்கீடு

205 0

கிழக்கு மாகாணத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகளில் அதி தீவிர கண்காணிப்பு பிரிவுகளை விஸ்தரிப்பதற்கு 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கொரோனாத் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஆதார வைத்தியசாலைகள் இதற்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

அங்கு அதி தீவிர கண்காணிப்பு பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, இதற்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சால் மேற்படி 50 மில்லின் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.