’நால்வரைக் கொன்றது டெங்கு’

307 0

நாடு கொரோனா வைரஸூக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், மற்றொரு பக்கம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

இதுவரையில் டெங்குவால் நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரையிலான  காலப் பகுதியில் 7 ஆயிரத்து 535 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரென தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதத்தில் மாத்திரம் 628 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதோடு, இதில் 200 இக்கும் மேற்பட்டவர்கள் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களெனவும் மேலும் தெரிவிக்கும் அவர், நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையால் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவுமெனவும் எச்சரித்துள்ளார்.

இதுவரையில் டெங்குவால் நால்வர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படுகிறார்கள். குறிப்பாக கொழும்பு மாநகரசபைக்குட்பட்டப் பிரதேசங்களில் டெங்கு நோய் பரவும் அவதானம் அதிகமாகக் காணப்படுகிறதென்றார்.

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பமாக இணைந்து டெங்கு நுளம்பு பரவும் இடங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.