வாகனங்களை திருடி மோசடியாக விற்பனை செய்துவந்த மூவர் கைது!

232 0

சிறிய ரக வாகனங்களைத் திருடி, இந்த வாகனங்களின் இஞ்சின் இலக்கம், செசி இலக்கம் ஆகியவற்றை மாற்றி, பதிவு செய்யப்பட்ட வேறு வாகனப் புத்தகங்களுக்கு அமைய வாகனங்களின் நிறங்களை மாற்றி, அந்த வாகனங்களைப் விற்பனை செய்துவந்த மூவரை இரத்தினபுரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 24 ஓட்டோக்கள், இரு சிறிய டிரக்குகள், 5 மோட்டார் சைக்கிள்கள், 20 வாகன இலக்கத் தகடுகள் என்பவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

லீசிங் செலுத்த முடியாத நபர்களிடமிருந்து வாகனங்களை பறிக்கும் நபரின் மஹவலவத்த பிரதேசத்திலுள்ள வீ​​ட்டிலிருந்தே அதிகளவான வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளனவெனவும், தற்போது அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவரின் ஓட்டோ திருடப்பட்டதாகக் கடந்த 21ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் மே்றகொள்ளப்பட்ட சீசீடிவி கெமரா விசாரணைகளில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவரிடம்  ​மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து, திட்டமிடப்பட்ட மேற்குறித்த வாகனத் திருட்டுச் சம்பவங்களைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.