மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள, இலுப்பைக்கடவை படகு துறை பகுதியில் மீன் வலையைச் சுத்தம் செய்து கொண்டிருந்த 34 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர்,நேற்று மாலை திடீர் என மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் திடீர் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.