அஸ்டிராஜெனேகா இரண்டாவது டோஸிற்கு பதில் ரஸ்யாவின் ஸ்புட்னிக்கை முதலாவது டோஸாக வழங்குவது குறித்து கவனம் செலுத்துகின்றோம்

196 0
முதலாவது டோஸ் அஸ்டிராஜெனேகா வழங்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸினை வழங்கமுடியாத நிலையேற்பட்டால் அவர்களிற்கு முதலாவது டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசியை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் விசேட குழுஇது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அஸ்டிராஜெனேகா இரண்டாவது டோஸிற்கு பதில் ரஸ்யாவின் ஸ்புட்னிக்கை முதலாவது டோஸாக வழங்குவது குறித்து ஆராயுமாறு சுகாதார அமைச்சின் விசேட குழு பரிந்துரை செய்துள்ளது,இரண்டு தடுப்பூசிகளும் ஒரே விதத்தில் செயற்படுவதன் காரணமாகவே அவர்கள் அவ்வாறு பரிந்துரைத்துள்ளனர் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.