கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற் கட்டமாக வழங்கப்பட்ட 50,000 சினோபாம் தடுப்பூசிகள் நாளை முதல் செலுத்தப்படவுள்ளன.
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 61 கிராம சேவையாளர் பிரிவுகளில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
இதன்படி, தெரிவு செய்யப்பட்ட இடங்களில் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.
குறித்த கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த அனைவருக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்படும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.